Thursday 5 April 2018

அதிநவீன பல் மாற்று சிகிச்சை முறை- டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட்ஸ் (Digital dental implants)

டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட்ஸ் தற்போதய பல் மருத்துவத்துறையின் ஒரு புதிய கண்டுபிடிப்பாகும். இது வழக்கமான டென்டல் இம்பிளாண்ட்ஸை காட்டிலும் சிறந்த ஒன்று. மேலும், இது ஒரு நிரந்தர பல் மாற்று முறையாகும். டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட்ஸ் இயற்கையான பற்களை போல் செயல்படுகிறது.

தங்களுக்கு துல்லியமான டென்டல் இம்பிளான்ட் செயல்முறை வேண்டுமென்றால் டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட்டை தேர்வு செய்யலாம்.

digital dental implants

டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட்ஸ் பெறுவதற்கான நடைமுறை என்ன?

  • உங்களின் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பு துல்லியமான டியக்னோசிஸ் (Diagnosis) செய்யப்படும். இப்படி செய்வதன் மூலம் சரியான தீர்வை (Result) பெறலாம். முதலில் வழக்கமான வாய் மற்றும் பல் பரிசோதனை செய்யப்படும்.
  • விரிவான க்ஸ்-ரே (X-Ray) மூலம் பல் மருத்துவர் உங்களின் பற்கள் மற்றும் ஈறுகளின் நிலைமையை கண்டறிகிறார். மேலும், 3டி ஸ்கேநும் செய்யப்படுகிறது.
  • எல்லாம் சோதனைகளும் முடிந்த பிறகு பல் மருத்துவர் உங்களுடன் அடுத்த கட்ட சிகிச்சையை பற்றி பேச அழைப்பார். சிறந்த இம்பிளான்ட் அகுலசின் (Implant occlusion) மற்றும் அதிகபட்ச எலும்பு ஆதரவு (bone support)பற்றி பல் மருத்துவர் விளக்குவார் .
  • பிறகு, ஒரு அறுவை சிகிச்சை வழிகாட்டி ( 3D Print) மற்றும் CAD/CAM சாப்ட்வேரை பயன்படுத்தி 3 Dimensional துணைகொண்டு இம்பிளான்ட் பொருத்தப்படும். இந்த மருத்துவ முறை ஒரு துல்லியமான ரிசல்ட் கொடுப்பது மட்டுமின்றி மிக குறுகிய நேரத்தில் இம்பிளான்ட்டை பொருத்த வழி செய்கிறது.

டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட்டின் நன்மைகள் 

  • மற்ற வழக்கமான அறுவை சிகிச்சைகளை காட்டிலும் டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட் செய்வதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
  • டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட் மருத்துவரின் முதல் நாள் சந்திப்பிலே இது பொருத்தப்படும். ஆனால் மற்ற வழக்கமான ப்ரோஸெடூர்கள் (procedures) டென்டல் இம்பிளான்ட்டை பொருத்துவதற்கு சில நாட்கள் எடுக்கும்.
  • இந்த டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட் முறை வலியற்றது . மேலும் இது சிகிச்சை செய்யும் போது எந்த சிரமத்தையும் கொடுக்காது. இருப்பினும், உங்களுக்கு பயமாக இருந்தால், நீங்கள் மருத்துவரிடம் கூறி மயக்க மருந்தை மேற்கொண்டு டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட் செய்து கொள்ளலாம்.
  • இந்த டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட் முறை மேற்கொள்வதற்கு நீங்கள் தனிப்பட்ட நேரம் ஒதுக்க தேவை இல்லை. இந்த சிகிச்சை முறை முதல் தடவையிலே செய்யப்படும்.

எப்படி டிஜிட்டல் இம்பிளான்ட் மற்ற வழக்கமான சிகிச்சைகளில் இருந்து வேறுபடுகிறது ?

  • இந்த முறையின் மூலம் இயற்கையான பற்கள் அமைப்பை பெறலாம்
  • டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட் அழகான முகத்தோற்றத்தை கொடுக்கிறது
  • நீங்கள் இந்த டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட்டை பாதுகாக்க பிரத்யேக முறைகளை கையாளத்தேவையில்லை.
  • மிக நீண்ட காலம் உழைக்கும், இம்முறையில் டிஜிட்டல் டென்டல் இம்பிளான்ட் மிக குறுகிய நேரத்திலும் மற்றும் வேகமாகவும் பொருத்தப்படும்.
தஞ்சையில் உள்ள பிரபல ராகா பல் மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த பல் சிகிச்சைகள் தரமான கட்டணத்தில் அளிக்கப்படுகிறது மேலும் நோயாளிகளுக்கு வலியற்ற மற்றும் நவீன சிகிச்சைகள் தரப்படுகிறது.
contact us

பல்நலமே உங்கள் உடல்நலம்! பல்நலம் காப்பீர்!! பல்லாண்டு வாழ்வீர்!!!

1 comment:

  1. Root canal is a treatment to repair and save a badly damaged or infected tooth instead of removing it. You can get Root Canal Treatment in Nagpur at minimal cost! The term "root canal" comes from cleaning of the canals inside a tooth's root. Root canal treatment is done to supplant the infected mash with a filling. The treatment is utilized to save the teeth which in some way or another should be taken out.

    ReplyDelete